news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 2035-க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்
tv

Also Watch

2035-க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்

இஸ்ரோ தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Space station

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திட்டவட்டம்

2035-ம் ஆண்டிற்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தில் பேசிய அவர்.

இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தின் முதல் தொகுதிக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், நமது சொந்த விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56வது கூட்டம் 

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56வது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ் கே ஹெல்தர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அளவு, வானிலை நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கும் திறந்து விடப்பட்ட நீர் விவகாரம், பற்றாக்குறை நீர் விவகாரம் தொடர்பாகவும், காவிரி ஆணையத்தின் முந்தைய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா உள்ளிட்டவை குறித்தும் விவாதம் செய்யப்பட உள்ளது.

ஆந்திரா முன்னாள் அமைச்சர் அதிரடி கைது

மதுபான போக்குவரத்து ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் அமைச்சர் கருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் கொண்டாபூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

மதுபான போக்குவரத்து ஒப்பந்தங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் இவரது மகன் கருமுரி சுனில் குமார், ஆந்திர பானங்கள் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டோண்டிரெட்டி வாசுதேவ ரெட்டி மற்றும் ராஜ் கேசிரெட்டி ஆகிய 3 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Link
வழிந்தோடிய பாமாயிலை எடுக்க போட்டா போட்டி

வழிந்தோடிய பாமாயிலை எடுக்க போட்டா போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மைக்கை பிடித்ததும் ஆவேசமாக கர்ஜித்த முதல்வர் விஜய்..!

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved