Also Watch
Read this
By: Manigandan Raja

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவிப்பு
கர்நாடகாவில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நான் என் கட்சியின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும் நாங்கள் என்ன முடிவு செய்திருக்கிறோமோ அதில் உறுதியாக இருப்போம் என்றும், கட்சியின் முடிவை அரசு பின்பற்றும் என்றார்.
இந்திய செவிலியர் கவுன்சிலுக்கு மாற்றாக புதிய ஆணையம்
இந்திய செவிலியர் கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையத்தை அமைப்பது குறித்து 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024-ல் நடைமுறைக்கு வந்த 'தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையச் சட்டம், 2023'-ன் படி, 'இந்திய செவிலியர் கவுன்சிலுக்கு மாற்றாக 'தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையம்' அமைக்க வேண்டும் என இந்திய தொழில்முறை செவிலியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சாலையோர பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகினர். பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ஷீந்திரா என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 2 பெண்கள், 4 ஆண்கள் உயிரிழந்த நிலையில், 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved