Also Watch
Read this
Posted on: May 27, 2025 01:45 PM
By: Srini Vasan

ஆபரேஷன் சிந்தூருடன், ஆபரேசன் Black Forest என்றொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஆபரேஷன் Black Forest நடவடிக்கையின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள நக்சல்களின் மையங்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
உள்ளூர் காவல்துறை, சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆபரேஷனில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 36 நக்சல்கள் சரணடைந்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் நக்சல்வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved