Also Watch
Read this
By: Web Team

பல்வேறு தேர்தல்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டது என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என கோரி தாக்கலான மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் நீதிமன்றத்தை நாடியதாக மனுதார ர் கூறியதை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மாலா பாக்சி அமர்வு ஏற்கவில்லை.
பொது,நலத்திற்காக ரிட் மனுக்களை தாக்கல் செய்யக்கூடாது என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் மீண்டும் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை மீண்டும் நாடுமாறு கூறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved