Also Watch
Read this
By: Web Team

அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அச்சொற்களை நீக்குவதற்கான எந்தவொரு திட்டமும் உள்நோக்கமும் இப்போதைக்கு இல்லை என்றும், அத்தகைய சட்ட திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் ஏதேனும் நடத்தப்படுவதாயின், ஒருமித்த கருத்துடன் பொதுவெளியில் மேற்கொள்ளப்படும் என்றும், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved