Also Watch
Read this
By: Manigandan Raja

பாகிஸ்தானின் நாடகத்தை மத்திய வெளியுறவுத்துறை மறுப்பு
பாகிஸ்தானுக்கும் - சீனாவுக்கும் இடையில் எல்லை இருப்பதாக கூறப்படுவதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், எல்லை தொடர்பான ஆணையம் எந்தவொரு சட்ட அடிப்படையும் இன்றி இயங்குவதாக தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் ஒட்டுமொத்த பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த எப்போதும் பிரிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
பாஜக - பகுஜன் சமாஜ் கட்சியினர் இடையே மோதல்
பஞ்சாப்பில் பாஜகவினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில் முன்னாள் மத்திய அமைச்சர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹோஷியார்பூர் மாவட்டம் பாரியான் கலான் கிராமத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்துவதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சட்டவிரோத கசகசா சாகுபடியை தடுக்க தீவிர முயற்சி
இந்தியாவில் சட்டவிரோத கசகசா சாகுபடியை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

சட்டவிரோத ஓபியம் சாகுபடியை கட்டுப்படுத்தவும், விநியோக சங்கிலி ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் பிரதமர் மோடியும் இந்திய அரசும் எடுத்து வரும் முயற்சிகளை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved