Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய அரசு திட்டவட்டம்
2 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் முடிவை திரும்ப பெறும் திட்டம் இல்லை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அக்டோபர் 15-ம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 இளைஞர்களுடன் லாட்ஜில் தங்கியிருந்த இளம்பெண்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சகலேஷ்பூரில், 2 இளைஞர்களுடன் லாட்ஜில் தங்கியிருந்த 23 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த 11-ஆம் தேதி லாட்ஜில் தங்கியிருந்த இளம்பெண், அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவருடன் தங்கியிருந்த 2 இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானை சேர்ந்த ஷாஜாத் பாட்டீ அமைப்பு
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தானை சேர்ந்த ஷாஜாத் பாட்டீ அமைப்பை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக இந்தியா அறிவித்துள்ளது. ஆயுதங்கள், வெடிபொருள்கள், போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபடும்படி இளைஞர்களை தூண்டிவிட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved