news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜினாமா
tv

Also Watch

tv

Read this

திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜினாமா

மம்தா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திரிணாமுல் காங்கிரஸ்

தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால் அதிர்ச்சி :

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த நிலையில், அக்கட்சியின் கவுன்சிலர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்பாரா நகராட்சியில் உள்ள 35 கவுன்சிலர்களில் 30 பேர் கூண்டோடு ராஜினாமா செய்தது அக்கட்சியின் தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பல்வேறு நகரங்களில் அக்கட்சியின் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.

பெண்ணைத் தாக்கி தங்கச் சங்கிலி பறித்த இளைஞர் :

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடைக்குள் நுழைந்து பெண் உரிமையாளரை தாக்கி தங்க செயினை பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

கொம்பள்ளியின் ஜெய்பேரி காலனியில் உள்ள எண்ணெய் கடைக்குள் நுழைந்த இளைஞர், பெண்ணுடன் விலை கேட்டு பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென தாக்கி, செயினை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றார்.

பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை :

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இரவு நேரத்தில் பெய்த மழையால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோர் வாகனங்களை மெதுவாக இயக்கிச் சென்றனர். மேலும் சில இடங்களில் மழை நீர் தேங்கியதாகவும் கூறப்படுகிறது.

திடீரென கொளுந்து விட்டு எரிந்த காட்டுத் தீ :

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் கியாரிகாட் கிராமப் பகுதியில் திடீரென காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பற்றி எரிந்த தற்காலிக RTO சோதனைச் சாவடி: 

மத்திய பிரதேசம் மாநிலம் சியோனி அடுத்த கவாசா (( Khawasa Border )) எல்லைச் சோதனைச் சாவடியில் இருந்த தற்காலிக RTO சோதனைச் சாவடிக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், தற்காலிக RTO சோதனைச் சாவடி முழுவதும் தீக்கிரையானது.

Related Link
இலங்கைக்கு காவல் வாகனங்கள் நன்கொடையளித்த இந்தியா

இலங்கைக்கு காவல் வாகனங்கள் நன்கொடையளித்த இந்தியா

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜினாமா

0
51 mins agoshare
திரிணாமுல் காங்கிரஸ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved