சபரி மலை ஐயப்பன் கோயிலில், கடந்த 21 நாட்களில் சுமார் 11 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரி்கள் தெரிவித்துள்ளனர்.கார்த்திகை மாதம் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையோட்டி, அதிகாலை 3 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.