ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செய்திகளை சுவையாகவும், விறுவிறுப்பாகவும் தொகுத்தளித்து, பெருமளவு எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி நியூஸ் தமிழ் 24x7 செய்தித் தொலைக்காட்சி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மகிழ்கிறேன். செய்திகளை கலையாகவும், விறுவிறுப்பாகவும் மக்களுக்குத் தொகுத்தளிப்பதில் திறப்படச் செயல்படுவதன் மூலம் பெருமளவு எண்ணிக்கையிலான பார்வையாளர்களை இந்தத் தொலைக்காட்சி ஈர்த்துள்ளது. நியூஸ் தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியூஸ் தமிழ் செய்தித் தொலைக்காட்சி மென்மேலும் வளரவும், அதன் சேவைப் பயணம் சிறப்பாகத் தொய்வின்றித் தொடரவும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.