இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 44.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.