news-tamil-logo

3/19/2026, 2:43:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வரலாறு காணாத உச்சம், அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

வரலாறு காணாத உச்சம், அதிர்ச்சி

ஒரு கிராம் தங்கம் ரூ.14,000 கடந்து பேரதிர்ச்சி

Posted on: Jan 21, 2026 06:58 AM

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், இன்று காலை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது.

காலையிலேயே அதிர்ச்சி தகவல்
தங்கம் விலை இன்று ஜனவரி 21ஆம் தேதி, காலையிலேயே ஏற்றம் கண்டு, அதிர்ச்சி தந்துள்ளது. இதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்தை தாண்டி உள்ளது. வெள்ளி விலை சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை ஆனது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம்

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கத்தின் விலை அதிகரித்து வரு​கிறது. சில நேரங்​களில் தங்கத்தின் விலை குறைந்​தாலும் மீண்​டும உயர்வை தான் கண்டு வருகிறது.
சென்​னை​யில், இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,250க்கு விற்​பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,14,000 ஆக இருந்தது.

தங்கத்தின் தேவை அதிகரிப்பு
உலக அளவில் பொருளா​தார நிலை​யற்ற தன்​மை, கிரீன்லாந்து பிரச்​சினை, அமெரிக்​கா, சீனா ஆகிய நாடுகள் தங்​கத்​தில் மீது அதிக முதலீடு செய்​வது போன்ற காரணங்​களால், தங்​கத்​தின் தேவை உயர்ந்து, விலை உயர்ந்​துள்​ளது என்று நிதி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தை நிலவரம், தங்கத்தின் விலை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்திய பங்குச்சந்தை பல்வேறு சறுக்கல்களை சந்தித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பங்குச்சந்தை நிலவரம்
இந்நிலையில், நேற்று 20ஆம் தேதி, பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவின்போது சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள், அதாவது 1.28% சரிந்து 82,180.47 ஆகவும், நிஃப்டி 353 புள்ளிகள் குறைந்து 25,232.50 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 82,000 புள்ளிகளாகவும், நிஃப்டி 25,203 புள்ளிகளாகவும் சரிந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை பதிவு செய்தது. இதன் தாக்கமும் தங்கம் விலையில் எதிரொலித்துள்ளதாக, வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.

இதையும் பாருங்கள் - திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 55 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved