news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வாடிய முகத்துடன் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ
tv

Also Watch

tv

Read this

வாடிய முகத்துடன் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ

கமல் உருக்கம்

73

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎமின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான ஏவிஎம் சரவணன் இன்று காலமான நிலையில், அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகியவற்றை பெற்றுள்ள அவர், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
வயது மூப்பு காரணமாக காலமான திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவர் மறைவெய்தியது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தனது இரங்கல் பதிவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அமைதியும், எளிமையும் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுக பழகிய அவரது மறைவால் வாடும் ஏவிஎம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்து கொள்வதாக முதல்வர் பதிவிட்டுள்ளார். நேற்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடிய ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமான நிலையில், அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

4
32 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved