இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா, 4 வரலாற்று சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் மற்றும் அரை சதம் அடித்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். இதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக ரன் மற்றும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.