பிலிப்பைன்ஸில் நடந்த ஃப்ரீ டைவிங் போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா சங்கர நாராயணன் 6 தேசிய சாதனைகளைப் படைத்தார். மபினி மற்றும் பங்களாவோ ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா மகளிருக்கான ஃப்ரி டைவிங் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி வாகை சூடினார். ஃப்ரீ டைவிங் என்பது, சுவாசத்துக்கான கருவிகள் ஏதுமின்றி கடலின் ஆழமான பகுதிவரை மூச்சையடக்கிச் சென்றுவிட்டு திரும்பும் விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.