போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக அலிகான் துக்ளக்கை ஜெ.ஜெ.நகர் போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.