news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ’அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றது செல்லும்’
tv

Also Watch

’அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றது செல்லும்’

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

49

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேரின் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றது செல்லும் என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சரியான நடவடிக்கைதான் என்றும், ராஜினாமாவை ஏற்ற உத்தரவு சட்டப்படி செல்லுபடியானது தான் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தகுதி நீக்கம் - 2 மாதங்களில் முடிவெடுத்திடுக..
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் ராஜினாமாவை ஏற்க தடையில்லை, தகுதி நீக்க நடவடிக்கை குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுக்கவும் சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பதவி விலகிய MLAக்கள் யார் யார்?
அதிமுக MLA பதவியில் இருந்து விலகிய மரகதம் குமரவேல், சத்தியபாமா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகியோர், தவெகவில் இணைந்த நிலையில், ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

’தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’ என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கில், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இன்று அக்டோபர் 13ஆம் தேதி இறுதி தீர்ப்பு அறிவித்தது. இதன்படி, சம்பந்தப்பட்ட 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்றும், சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

மனுக்கள் தள்ளுபடி
சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் எதிராக அரசியலமைப்பின் கீழ் தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் 2 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

Related Link
மரகதம் குமரவேல், சத்யபாமா பதவி ஏற்பு

மரகதம் குமரவேல், சத்யபாமா பதவி ஏற்பு

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு விருப்பமில்லை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved