Also Watch
Read this
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே, அமளி காரணமாக, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடர்
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே கேள்வி நேரம் நடைபெற்றது.

இந்நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சியினர் அமளியை தொடர்ந்து, கூச்சல் குழப்பம் நிலவியதால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அனல் பறக்கும் கூட்டத்தொடர்
நீட் முறைகேடு, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கட்சித்தாவல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சி எம்.பிக்களின் கட்சித்தாவல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

திமுக நிலைப்பாடு, எதிர்பார்ப்பு
காங்கிரஸ் - திமுக இடையேயான கூட்டணி முறிவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு போன்ற அரசியல் ரீதியிலான மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.