சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத இமாலய உச்சம் தொட்டுள்ளது. உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஜனவரி 23ஆம் தேதி, ஒரே நாளில், ஒரு சவரனுக்கு ரூ.3,600 என உயர்ந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்தது. குறைந்தாலும் மீண்டும் உயரும் தங்கம்உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சில நேரங்களில் தங்கம் விலை குறைந்து, மீண்டும் உயர்கிறது. தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பான விஷயமாக, பொது மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தை அடமானம் வைத்து எளிதில் பணம் பெற முடிகிறது. தேவையான நேரத்தில் அதை விற்பனை செய்யவும் முடிகிறது. ஒரு லட்சத்தை தாண்டியதுசமீபத்தில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது. அன்றைய நாள் முதல் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருவது, வாடிக்கையாளரை கலக்கமடைய வைத்துள்ளது. இன்றைய விலை நிலவரம்சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று, ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.450 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,650 ஆக விற்பனை ஆனது. சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,200 ஆக உள்ளது. இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.360 மற்றும் பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து, ரூ.3,60,000 ஆகவும் உள்ளது. Related Link "தமிழ்நாடு N.D.A. உடன் இருக்கிறது"