பிரதமர் மோடியே தமது அபிமான நடிகர் என கூறிய ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவை, அம்மாநில காங்கிரசார் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பஜன்லால் சர்மா பங்கேற்றார். அப்போது அவரது அபிமான நடிகர் யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு நரேந்திர மோடி என புன்னகையுடன் பதிலளித்தார்.