news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சமூகநீதி நாளில் ஒரு சமூக அநீதி என உதயநிதி கண்டனம்
tv

Also Watch

சமூகநீதி நாளில் ஒரு சமூக அநீதி என உதயநிதி கண்டனம்

"வன்மையாக கண்டிக்கிறேன்"

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்...
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில்,

தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

Related Link
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் ஒளிரட்டும் என மு.க.ஸ்டாலின் புகழாரம்

பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் ஒளிரட்டும் என மு.க.ஸ்டாலின் புகழாரம்

கேவலத்தின் உச்சம்

தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.


அரசு துணை நிற்க வேண்டும்

மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது. ’ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது,’ என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த அரசு துணை நிற்க வேண்டும்

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய மனிதா...!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved