news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சிலிண்டர் தட்டுப்பாடு, அவசர ஆலோசனையில் பிரதமர் மோடி
tv

Also Watch

சிலிண்டர் தட்டுப்பாடு, அவசர ஆலோசனையில் பிரதமர் மோடி

விலையேற்றம், தட்டுப்பாடு

50

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்தியா முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பற்றி எரியும் போர்ச் சூழல்
ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர், உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

விலை அதிகரிப்பு
கடந்த 7ஆம் தேதி, வீட்டு எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தன. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928க்கும், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து, ரூ.2,044க்கும் விற்பனை ஆனது. ரெஸ்டாரண்ட், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரி, ஸ்வீட் கடைகள், கேட்டரிங், தங்கம் - வெள்ளி பட்டறைகள், டைல்ஸ் தொழிற்சாலை, கண்ணாடி மற்றும் பல்வகை தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும், வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள், முக்கிய பங்கு வகிக்கிறது.

விலையேற்றம், தட்டுப்பாடு
விலை ஏற்றம் ஒரு புறம் இருந்தாலும், வர்த்தக சிலிண்டர் விநியோகத்தில், கடந்த இரண்டு நாட்களாக தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டு, கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தலைநகர் டில்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Related Link
முழுவீச்சில் அம்மா உணவகங்கள் இயங்க வேண்டும் - இபிஎஸ்

முழுவீச்சில் அம்மா உணவகங்கள் இயங்க வேண்டும் - இபிஎஸ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved