Also Watch
Read this
கடந்த திமுக ஆட்சி பத்திரப்பதிவுத்துறையில் அரசு நிலங்கள், நீர் நிலைகள், கோயில் நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியிருந்த நிலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மூர்த்தி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதோடு, எந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில் தனக்கு கட்டிங் கொடுத்தார்கள் என அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என மூர்த்தி சீறினார்.

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறி இருப்பதாவது;
திமுக ஆட்சியில், பத்திரப் பதிவுத் துறையில் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்தது.
பழனி விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருக்கிறது. பல இடங்களில் போலி பத்திரங்கள் மூலம் மோசடிகள் நடந்தேறியுள்ளன. கோயில் நிலங்கள், குளங்கள், அரசு இடங்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. துறை அமைச்சரிடம் பேசி, அதற்கு தனி ஒரு தனி செல் உருவாக்கலாம்.

திமுக ஆட்சியில் எழுந்த பத்திரப்பதிவுத்துறை புகார்கள் சிபிசிஐடிக்கு செல்லவில்லை. மிகவும் நுணுக்கமாக பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முறைகேடு பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் அரசிடம் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு நிர்மல்குமார் கூறி உள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி கூறி இருப்பதாவது;
பத்திரப்பதிவு மோசடி விவகாரத்தில் அரசுக்கு தெரியாமல் பத்திரப்பதிவு நடைபெற வாய்பே இல்லை. கடந்த காலத்தில் பத்திரப்பதிவுத் துறையில் தவறு செய்தால் மேலதிகாரிகளே நடவடிக்கை எடுப்பார்கள். சிபிசிஐடி விசாரணை இல்லாமல் பத்திரப்பதிவு துறை நடத்த கூடாதா?

தேவைப்பட்டால் தான் சிபிசிஐடி விசாரணைக்கு செல்ல முடியும். 589 அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு எனக்கு கட்டிங் கொடுத்தார்களா? ஆதாரமின்றி, பொத்தாம் பொதுவாகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல. மூன்று மாத காலம் பொறுமையாக இருப்போம் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறினால் பதில் தருவோம்.
இவ்வாறு மூர்த்தி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved