மளிகைப் பொருட்களை ஆன்லைனில் டெலிவரி செய்யும் செப்டோ நிறுவனம், ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்களிடம் அதிக விலையும், ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்களிடம் குறைவான விலையும் வாங்குவதாக, பெங்களூருவை சேர்ந்த பூஜா சப்டா ((Pooja Chhabda)) என்பவர் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். அவர் நடத்திய ஆய்வில் 500 கிராம் திராட்சைக்கு ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களிடம் 65 ரூபாயும், ஐபோன் வைத்திருப்பவர்களிடம் 146 ரூபாயும் வாங்குவது அம்பலமாகியுள்ளது.