news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதல் சுற்றிலேயே ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
tv

Also Watch

முதல் சுற்றிலேயே ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றில்...

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முதல் சுற்றிலேயே ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலேயே உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 'நம்பர்-5'வது வீரரான அவர், ஏ.டி.பி. ஒற்றையர் தரவரிசையில் 49வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் மரியானோ நவோனிடம் 6-க்கு 7, 7-க்கு 5, 6-க்கு 4, 2-க்கு 6, 1-க்கு 6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியதால், 2 முக்கிய வீரர்களை நாடு திரும்புமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ஆகியோரை நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இமாம் உல் ஹக் 2-வது போட்டியின் முதல் நாளில் காயமடைந்ததாக கூறி வெளியேறினார். பாகிஸ்தான் மோசமான நிலையில் இருந்தபோதிலும் பேட்டிங் செய்ய வரவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்
பாகிஸ்தானை 2-வது டெஸ்டில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 34.44 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது.  இலங்கை அணி 33.33 சதவீத புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் அணி 19.05 புள்ளியில் இருந்து 16.67 சதவீத புள்ளிகளுக்கு சரிந்து கடைசி இடமான 9-வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 5-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

Related Link

"சர்தார் - 2" டிரெய்லர் வெளியாகி வரவேற்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved