news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு திமுக ஆதரவு
tv

Also Watch

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு திமுக ஆதரவு

CJP நிர்வாகிகள் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

40

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

மத்திய பாஜக அரசால் எத்தனை போராட்டக்காரர்களைக் கைது செய்ய முடியும்? எத்தனை இளம் குரல்களை மௌனிக்க செய்ய முடியும்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

மக்கள் சக்தி...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
எத்தனை போராட்டக்காரர்களை இந்த அரசால் கைது செய்ய முடியும்? எத்தனை இளைஞர்களின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியும்? அவர்கள் சிறையில் அடைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, எந்த அரசியல் கட்சியையும் சாராத சாதாரண பொது மக்களும் பெருமளவில் வீதிக்கு வந்து, மக்கள் சக்தி என்னவென்பதை அவர்களுக்குக் காட்டுவார்கள்.

சட்ட உதவி வழங்க தயார்...
அஷுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோருக்கு எனது ஆதரவும் தோழமையும். அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளை வழங்கவும், வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்யவும் திமுக தயாராக உள்ளது.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

“நன்றி ஸ்டாலின் சார்”
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் டெல்லியில் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டதற்கு எதிராக கண்டனம் தெரிவித்துக் குரல் கொடுத்ததற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தனது நன்றியைத் தெரிவித்து உள்ளார்.

“சட்டவிரோத கைது நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக மு.க.ஸ்டாலின் சாருக்கு நன்றி” என்று அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பதிவிட்டுள்ளார்.

Related Link

"ஜந்தர் மந்தரில் இனி போராட முடியாது"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

25 ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved