news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஸ்டாலினை மண்ணுக்குள் புதைத்தாலும், ''ஸ்டாலின் திட்டங்களை புதைக்க முடியாது''
tv

Also Watch

tv

Read this

ஸ்டாலினை மண்ணுக்குள் புதைத்தாலும், ''ஸ்டாலின் திட்டங்களை புதைக்க முடியாது''

மறைமலைநகரில் மனமுருக பிரச்சாரம்

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவு என பல திட்டங்களை நிறைவேற்றிய தன்னை பார்த்து கொரோனா காலத்திலேயே போய் சேர்ந்திருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுவதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்டாலினை மண்ணுக்குள் புதைத்தாலும் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மண்ணுக்குள் புதைக்கும் துணிச்சல் யாருக்கும் இருக்காது எனவும் சூளுரைத்தார்.

சென்னை அடுத்த மறைமலைநகரில்
ஆலந்தூர் வேட்பாளர் தா.மோ.அன்பரசன்
உத்திரமேரூர் வேட்பாளர் க.சுந்தர்
ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)
செங்கல்பட்டு வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி
செய்யூர் வேட்பாளர் சிந்தனைச்செல்வன்(விசிக)
திருப்போரூர் வேட்பாளர் பன்னீர்தாஸ் (விசிக)
மதுரவாயல் வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி
காஞ்சிபுரம் வேட்பாளர் நித்யா சுகுமார்
மதுராந்தகம் வேட்பாளர் அம்லு பொன்மலர்
தாம்பரம் வேட்பாளர் கிருத்திகாதேவி
பல்லாவரம் வேட்பாளர் அனகை முருகேசன் (தேமுதிக) ஆகியோரை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

யாராக இருந்தாலும்...
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, அவதூறுகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அவர், இப்போது திடீரென்று என்னுடைய மரணத்தை விரும்பி பேசியிருக்கிறார். மாதந்தோறும் உரிமைத்தொகை கொடுத்து, ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு துணை நிற்கும் நான், இல்லாமல் போக வேண்டுமாம். முதல் நாள் - முதல் கையெழுத்துப் போட்டு, மகளிர் அனைவரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்ட இந்தக் கை, மண்ணுக்குள் போக வேண்டுமாம். தமிழ்நாட்டுக் குழந்தைகள் அனைவரும் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று, காலை உணவு - புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் வெற்றியை மனதார கொண்டாடும் நான், கொரோனாவில் போயிருக்க வேண்டுமாம். யாருடைய ஆசை? பழனிசாமியின் ஆசை. இந்த உலகத்தில் மரணத்தைச் சந்திக்காத எந்த மனிதரும் இல்லை. யாராக இருந்தாலும் மரணம் ஒருநாள் நிச்சயம் வந்தே தீரும். இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும். மண்ணில் புதைப்பார்கள். ஆனால், சவால் விட்டுச் சொல்கிறேன்.

சாபங்கள் ஒன்றும் செய்யாது
பழனிசாமி இவ்வளவும் பேசிவிட்டு, என்ன சொல்கிறார் தெரியுமா? “நான் அவ்வாறு பேசவே இல்லை, கொரோனா காலத்தில் ஸ்டாலின் காணாமல் போனார்” என்று தான் சொன்னேன் என்று பல்டி அடித்து, அடுத்த பொய்யை பேசியிருக்கிறார். பழனிசாமி அல்ல, அவருக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ். சாமிகளானாலும் அவர்கள் விடும் சாபங்களெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது. பழனிசாமியின் லட்சணம் உங்களுக்கு தெரியாதா? இங்கிருந்து 50, 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், கூவத்தூரில் தானே கூத்தடித்தார்கள்.

அந்த அவமானக் காட்சி எல்லாம் நாடு முழுவதும் ஒளிபரப்பாகி அனைவரும் வெட்கி தலைகுனிந்து கொண்டிருக்கிறோம். அப்படி முதலமைச்சரான பழனிசாமியும், அவரது அமைச்சரவை ஆமாம் சாமிகளும், என்னென்ன ஆட்டம் போட்டார்கள் என்று உங்களுக்கே தெரியும். அந்த அவலங்களுக்குள் எல்லாம் நான் அதிகமாக போக விரும்பவில்லை. கூவத்தூர் ஆட்டத்தையே பொறுக்காத தமிழ்நாடு, இப்போது பா.ஜ.க. உடன் சேர்ந்து போடும் ஆட்டத்தையா பொறுத்துக் கொள்ளும்? வெயிட் அண்ட் சி பழனிசாமி, ஏப்ரல் 23ஆம்தேதி தான் உங்களின் கொட்டத்துக்கும் - வாய்க்கொழுப்புக்கும் முடிவு கட்டும் ஜட்ஜ்மெண்ட் டே.

சூப்பர் ஸ்டார் ஸ்டேட்
இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி. சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறோம். அதனால் தான், ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் வருகிறார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து கட்டமைக்க, ஏப்ரல் 23ஆம் நாள், தமிழ்நாட்டு மக்கள் உதயசூரியனுக்கும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி, வாக்கு சேகரித்தார்.

Related Link
உதயநிதியின் நீட் ரத்து ரகசியம் என்ன? இபிஎஸ் கேள்வி

உதயநிதியின் நீட் ரத்து ரகசியம் என்ன? இபிஎஸ் கேள்வி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
9 hrs 11 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved