டெல்லி சட்டமன்ற தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக தனது குடும்பத்தினர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பெண் ஆதரவாளர்களுடன் அனுமன் மற்றும் வால்மீகி கோவிலில் வழிபட்ட பின்னர், வேட்புமனு தாக்கல் செய்தார்.