கடவுளே அஜித்தே என்ற கோஷம் தன்னை கவலை அடையச் செய்வதாக நடிகர் அஜித்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தன் பெயருடன் வேறு எந்த அடைமொழியையும் சேர்த்து அழைப்பதை தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், தன்னுடைய கோரிக்கைக்கு ரசிகர்கள் உடனடியாக மதிப்பு கொடுப்பார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.