news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கம் விலை மீண்டும் குறைவு
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை மீண்டும் குறைவு

ஒரு சவரனுக்கு ரூ.1,480 குறைவு

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் கிராமிற்கு ரூ.185 குறைந்து ரூ.14,765க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,18,120க்கும் விற்பனை ஆனது.

மே 12
சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 330 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 13 காலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்த தங்கம், ரூ.15,400-க்கு விற்பனை ஆனது.

மே 13 பிற்பகல்
காலையில் ஒரு சவரனுக்கு 8 ஆயிரத்து 560 ரூபாய் அதிகரித்த நிலையில், பிற்பகலில் ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி விலை, 10 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 14
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சத்து 15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 15 காலை
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 15 பிற்பகல்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் கிராமிற்கு ரூ.185 குறைந்து ரூ.14,765க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,18,120க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 12 - ரூ.1,14,680
மே 13 - ரூ.1,23,200 காலை
மே 13 - ரூ.1,20,000 பிற்பகல்
மே 14 - ரூ.1,20,400
மே 15 - ரூ.1,19,600 காலை
மே 15 - ரூ.1,18,120

Related Link
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்வு

        







SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved