news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கம் விலை சவரனுக்கு 320 குறைந்தது
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை சவரனுக்கு 320 குறைந்தது

வெள்ளியின் விலை ரூ.5 குறைந்தது

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இன்றைய தங்கம் விலை

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் கடுமையாக சரிந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஏப்ரல்-08
ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 340 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-09
ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-10
சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 125 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,125 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-11
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-13
ஒரு சவரனுக்கு 320 குறைந்து, 1 லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் கடுமையாக சரிந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
08 ஏப்ரல் - ரூ.1,13,600
09 ஏப்ரல் - ரூ.1,12,000
10 ஏப்ரல் - ரூ.1,13,000
11 ஏப்ரல் - ரூ.1,12,800
13 ஏப்ரல் - ரூ.1,12,480 இன்று 

Related Link
நாட்டின் AI தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவோம் - விஜய் வாக்குறுதி

நாட்டின் AI தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவோம் - விஜய் வாக்குறுதி

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

3
12 hrs 29 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved