news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news வேங்கடாசலபதி கோயில் தேரோட்டம்
tv

Also Watch

tv

Read this

வேங்கடாசலபதி கோயில் தேரோட்டம்

திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தஞ்சாவூர் கோவில் விழா

கோயில் தேரோட்டம்  : 

கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தென்னக திருப்பதி, தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி பிரமோற்சவம் 12 தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 04ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 09ம் நாளான இன்று பங்குனி திருவோண நட்சத்திரத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீ பொன்னப்பர் பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருள, கோயில் யானை பூமா முன்செல்ல, நாட்டிய குதிரைகள் நடனமாட, கேரள ஜெண்டை வாத்தியங்கள், நாதஸ்வர மேள தாள இசை முழங்க, ஒட்டகங்கள், மயிலாட்டம் ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும் தேரில் பவனி வரும் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

Related Link
புனித வியாகுல அன்னை ஆலயத்தில் பாஸ்கா தேர்த் திருவிழா

புனித வியாகுல அன்னை ஆலயத்தில் பாஸ்கா தேர்த் திருவிழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

2
2 hrs 26 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved