Also Watch
Read this
By: Manigandan Raja

பொள்ளாச்சி ஜெயராமன் சாடல் :
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் துணை சபாநாயகரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.
இன்று ஆச்சிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சேரன் நகர் , தில்லை நகர் , திரு வி க நகர் , சங்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் பாஜக, தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உறுதி செய்ய இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி :
உலக அரங்கில் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு தனி அந்தஸ்து தனி மரியாதை உள்ளது உலகத்தில் புகழ்பெற்ற தலைவர்களில் முதல் இடத்தில் பாரதப் பிரதமர் உள்ளார் அவரை பொறுத்தவரை.
எடப்பாடி யார் முதலமைச்சரானவுடன் தமிழக மக்களுக்கு எப்படி ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தார்களோ அதே போல நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ நாட்டு மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு வர என்ன திட்டங்களுக்கு என்ன நிதி தேவை என்பதை அறிந்து பாரத பிரதமர் ஒதுக்கி கொடுப்பார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனவுடன் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் வீடில்லாத அனைவருக்கும் பசுமை கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் மேலும் முதலமைச்சர் ஆனவுடன் முதல் கையெழுத்தாக எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து குடும்ப பெண்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆயிரம் ரூபாய் உரிமை தொகை விடுபட்ட மகளிரையும் சேர்த்து 2000 ரூபாய் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை 2000 வழங்கப்படும் கல்வி கடன் தள்ளுபடி மாவட்ட செய்திகள்செய்யப்படும் அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லாமல் ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் இதுபோன்ற நல்ல திட்டங்களுக்கு தேவையான நிதியினை பாரத பிரதமர் தமிழகத்திற்கு வழங்குவார்.
ஸ்டாலின் ஐந்தாண்டு காலம் மோடியுடன் சண்டை போட்டு தமிழக மக்களை வஞ்சித்து விட்டார் என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved