Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிப்ரவரி 28ஆம் தேதி, காலை ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.2,800 அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.15,550-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,400-க்கும் விற்பனை ஆனது.
கடந்த வாரத்தில்...
கடந்த வாரத்தில், தங்கம், வெள்ளியின் விலை சற்று குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தது. தற்போது வாரத்தின் தொடக்கத்திலேயே அவற்றின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிப்.23 வாரத்தில் முதல் நாளில்...
வாரத்தின் முதல் நாளான பிப்ரவரி 23ஆம் தேதி, தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ரூ.14,860க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை ஆனது.
பிப்.24 தங்கம், வெள்ளி விலை
தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

பிப்.25 தங்கத்தின் விலை நிலவரம்
ஒரு சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் 14,930 ரூபாயாக இருந்தது. சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 295 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 95,000 ரூபாயாக இருந்தது.

பிப்.26 விலை நிலவரம்
ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பிப்.27 விலை நிலவரம்
ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை செய்யப்பட்டது.

பிப்.28 தங்கம், வெள்ளி நிலவரம் (காலை)
மாத மற்றும் வார இறுதி நாளான பிப்ரவரி 28ஆம் தேதி, சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 21,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்து, மீண்டும் 15,000 ரூபாயைத் தாண்டியது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
பிப்.28 தங்கம், வெள்ளி நிலவரம் (பிற்பகல்)
சென்னையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்ந்தது. ஒரு சவரனுக்கு 5,200 ரூபாய் விலை அதிகரித்தது. காலையில் சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்த நிலையில் பிற்பகலில் 2,800 ரூபாய் உயர்ந்தது. ஒரே நாளில் 5,200 ரூபாய் அதிரித்ததால் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 24,400 ரூபாய்க்கு சென்றது. ஒரு கிராம் தங்கம் 15,550 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்னையில் வெள்ளி விலையும் ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்தது. காலையில் 5 ரூபாய் அதிகரித்த நிலையில், பிற்பகலில் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
23.02.2026 - ரூ.1,18,880
24.02.2026 - ரூ.1,19,120
25.02.2026 - ரூ.1,19,440
26.02.2025 - ரூ.1,19,360
27.02.2028 - ரூ.1,19,200
28.02.2026 - ரூ.1,21,600 (காலை)
28.02.2026 - ரூ.1,24,400 (பிற்பகல்)
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved