வரும் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், சென்னை அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ரோகித் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.