பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகத்திலேயே தான்தான் சிறந்தவன் எனப் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், மக்கள் மெஸ்ஸி, மரடோனா அல்லது பீலேவை விரும்பலாம் அதை தாம் மதிப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர்களை விட தான் சிறந்தவன் என்றும், கால்பந்து வரலாற்றில் தன்னை விட சிறந்த யாரையும் தாம் பார்த்ததில்லை எனவும் கூறினார்.