Also Watch
Read this
By: Web Team

அம்பானி... ஆசியாவிலேயே மிகப்பெரிய செல்வந்தராக வலம் வருகிறார். இந்தியாவில், அம்பானி மட்டுமின்றி, லட்சுமி மிட்டல், கௌதம் அதானி, ஷிவ் நாடார், குமாரமங்கலம் பிர்லா என கோடீஸ்வர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
சுமார் 146 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், இவர்கள் மட்டும் எப்படி, இப்படி கோடீஸ்வரர்களாக முடிந்தது. இவர்கள் எதை தொட்டாலும் அது பணமாக மாறும் ரகசியம் என்ன? விரிவாக பார்ப்போம்....
இந்தியாவில், பனியா என்ற ஒரு சமூகம் இருக்கிறது. இதை பற்றி பெரும்பாலும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே தெரிந்து இருக்கும். வங்கி, தொழில்நுட்பம், வர்த்தகம் தொடர்பான துறையில் கொடி கட்டி பறக்கும் ஜாம்பவான்கள், பனியா சமூகம் என்று சொல்கின்றனர். இந்த ஜாம்பவான் லிஸ்டில் இருக்கும் முகேஷ் அம்பானி ஆகட்டும், தமிழ்நாட்டை சேர்ந்த ஷிவ் நாடார், ஸ்ரீதர் வேம்பு போன்றவர்களாகட்டும், எப்படி தொழில்துறையில் கொடி கட்டி பறக்கின்றனர்? பெரும்பாலானோரின் கேள்வி இது.
உதாரணம்... முகேஷ் அம்பானி கால் பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு மொபைல் நெட்வொர்க், பவர் பிளாண்ட், டிஜிட்டல் நெட்வொர்க், ரீடெய்ல் என ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். முகேஷ் அம்பானி புதியதாக ஒரு பிசினஸ் தொடங்கினால், அது உடனே சக்ஸஸ். நாம் எவ்வளவு முயற்சித்தாலும் எதுவுமே நடப்பதில்லை. முகேஷ் போன்ற ஒரு சிலரால் மட்டும் எப்படி பிசினஸ்ல இவ்வளவு ஒரு பெரிய சக்ஸஸ் பார்க்க முடியுது? இதற்கு சில கருத்து சொல்லப்படுகிறது.
அதாவது, பொதுவாக மாத சம்பளத்திற்கோ, சொந்த தொழில் மூலமோ வரும் பணத்தை வைத்து வாழ்க்கை முறையை நடத்துவதே பெரும்பாலானோரின் செயலாக இருக்கும். ஆனால், பிசினஸ் மைண்ட் இருக்கும் அம்பானி போன்றவர்கள், தங்களுக்கு ஒரு ரூபாய் கிடைத்தாலும் அதை எப்படி மூலதனமாக மாற்றுவது, அதை வைத்து எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்று மட்டும் தான் சிந்திப்பார்கள். அதாவது, ஒரு பிசினஸோட லாபம் இன்னொரு பிசினஸை உருவாக்கி அதில் இன்னொரு லாபத்தை தருகிறது.
இதேபோல், சிறுவயதில் இருந்தே ஒரு தொழிலை எப்படி நடத்தணும், தொழில் சார்ந்த பேச்சு, நடவடிக்கை, ஒரு பொருளுக்கு எப்படி விலை நிர்ணயிப்பது, அந்த பொருளை எவ்வளவு லாபத்துக்கு விற்பது, எப்படி வாங்குவது? என்று, தொழில் சார்ந்த சூட்சமம் இவர்களுக்கு குடும்ப சூழலே கற்றுக் கொடுக்கிறது.

அடுத்து, தொழிலதிபர்கள் பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதும் என்று இருக்க மாட்டார்கள். அந்த பணத்தை எப்படி பாதுகாப்பது? ரொம்பவே கவனமாக இருப்பார்கள். ஆயிரம் ரூபாய் லாபம் வந்தால், அதை எப்படி முதலீடு செய்து பாதுகாப்பது, அந்த முதலீட்டில் இன்னும் ஆயிரம் ரூபாய் எப்படி உருவாக்குவது, வரிகளை எப்படி கையாள்வது, சொத்துக்களை எந்தெந்த வகையில் வைத்திருப்பது, நிதி நிர்வாகம் என ஒவ்வொன்றிலும் அதீத கவனம் செலுத்துவார்கள்,
முக்கியமாக, பெரிய தொழிலபதிபர்கள் தங்களின் பிசினஸ் பார்ட்னரா குடும்ப பெண்களை சேர்த்து கொள்வதும், பணத்தை தக்க வைத்து கொள்வதற்கான காரணமாக இருக்கிறது. முகேஷ் அம்பானியின் சொத்துக்கு பாதி பங்குதாரராக அவரது மனைவி உள்ளார். இதுபோல ஒவ்வொரு பிசினஸ் ஜாம்பவானும் தன்னை சேர்ந்த பெண்களுக்கு தொழிலிலும், சொத்துக்களை நிர்வகிப்பதிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். பெண்களின் கவனிப்பும், கண்காணிப்பும் சொத்துக்களை நிர்வகிப்பதற்கு பயன்படுவதாக பார்க்கப்படுகிறது.
இதேபோல, காலத்திற்கு ஏற்ப இவர்கள் தங்களோட பிசினஸ் ஐடியாக்களை மாற்றி கொண்டிருப்பார்கள். எந்த துறை வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்பதை கண்காணித்து அதன் மீது முதலீடு இருக்கும். முக்கியமாக நிர்வாகத்தில், அதீத அக்கறை, கண்டிப்பும் செலுத்துவதால் அம்பானி போன்றவர்கள் கோடீஸ்வரராக வலம் வருவதாக கூறப்படுகிறது.
மாற்றி யோசிங்க...