news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஃபிரியாணி அண்டாவில், பிளாஸ்டிக் கவரில், கூடுவாஞ்சேரி கொ* வழக்கில் திடுக்கிடும் பின்னணி
tv

Also Watch

ஃபிரியாணி அண்டாவில், பிளாஸ்டிக் கவரில், கூடுவாஞ்சேரி கொ* வழக்கில் திடுக்கிடும் பின்னணி

வழக்கையே திருப்பிபோட்ட சரவணா ஸ்டோர்ஸ் கவர்

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் படுகொ* செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரோம்பேட்டையில் உள்ள சரவண ஸ்டோர்ஸ் கவர் மூலம் போலீசார், துப்பு துலக்கிய நிலையில் எதற்காக கொ* நடந்தது? எப்படி செய்தார்கள்? என்பது குறித்து கைதான கொலையாளிகள் வாக்குமூலம் அளித்த செய்தித் தொகுப்பை காணலாம்.

ஆக்ரா ரயில் நிலையத்தில்...
தமிழகத்தையே உலுக்கிய சென்னை, கூடுவாஞ்சேரி பெண் துண்டு துண்டாக வெட்டி கொ* செய்யப்பட்ட வழக்கில் கைதான கணவன் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா ரயில் நிலையத்தை அடைந்தபோது, கேட்பாரற்று கிடந்த சூட்கேசை ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அதில், பெண் ஒருவர் கொ* செய்யப்பட்டு, உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஒரு கவரில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த கவரை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சரவணா ஸ்டார்ஸின் பெயர் கவரில் பொறிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசாரின் பார்வை சென்னையை நோக்கி திரும்பியது.

சிக்கிய சிசிடிவி காட்சி
இதையடுத்து, ரயில்வே போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு ஆணும், பெண்ணும் சூட்கேஸை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதும், பின்னர் ரயிலில் வைத்து விட்டு புறப்பட்டுச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த தம்பதி எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்ள போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

38 வயதான...
இதன் அடிப்படையில், அந்த நபர்கள் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின்னர் அந்த வீட்டுக்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் சிறு சிறு உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் உப்பு கலந்த, மைதா மாவுடன் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் பாகங்களை மீட்ட போலீசார், அதனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் கொ* செய்யப்பட்டவர் 38 வயதான ஹயத்துன் நிஷா என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான மானிக் உத்தீன் லஸ்கர், அவரது மனைவி பகபதி மாஜி ஆகியோரும் தங்கியிருந்தது தெரியவந்தது.

தகாத உறவால்...
தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார், தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்கள் மணிப்பூரில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் சென்னை அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் கொ*யான நிஷாவும், மானிக் உத்தீனும் தாம்பரம் சானட்டோரியத்தில் உள்ள மெப்ஸில் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்த போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இது நிஷாவின் 19 வயது மகனுக்கு தெரியவர அவர் தாயை கண்டித்துவிட்டு தனியாக சென்றுவிட்டார். அதன்பிறகு நிஷாவும் மானிக் உத்தீனும் எல்லை மீறி பழக ஆரம்பிக்கவே, நிஷா கர்ப்பமடைந்தார்.

பிரியாணி அண்டாவில்...
பின்னர் நிஷா, டைவர்ஸ் செய்துவிட்டு தன்னை கல்யாணம் செய்யச் சொல்லி அவரை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு மானிக், இருவருக்கும் வயசு வித்யாசம் உள்ளதால் திருமணம் செய்ய முடியாது என கூறிய நிலையில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட ஆரம்பித்தது. இதுகுறித்து மானிக் உத்தீன் தனது மனைவியிடம் கூற இருவரும் நிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த கூடுவாஞ்சேரி வருகை தந்து, வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது நிஷா தன்னை திருமணம் செய்யக்கூறி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த மானிக் உத்தீன், முகத்தில் மயக்க மருந்தை தெளித்து, கழுத்தை அறுத்துள்ளார். இதில் நிஷா துடிதுடிக்க உயிரிழக்க, ரத்தத்தை பிரியாணி அண்டாவில் பிடித்துள்ளனர்.

ரயிலில் போட்டுவிட்டு...
பின்னர், சடலத்தை மின்விசிறியில் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு ஆட்டின் தோலை உரிப்பதுபோல் உரித்து, அனைத்து உடல் பாகங்களையும் துண்டு துண்டாக வெட்டி, தலையை மொட்டை அடித்து, இரு கண்களையும் பிடுங்கி, தலையை துண்டாக அறுத்தெடுத்து அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தை குட்டி குட்டி சதைகளாக வெட்டியுள்ளனர். பின்னர் முகம் அழுகாமல் இருக்க அதில் 15 கிலோ உப்பையும், மைதா மாவையும் போட்டு கிளறி, சிறு உடல் பாகங்களை அண்டாவில் வைத்துள்ளனர். மற்றும் சில உடல் பாகங்களை சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் கவரில் போட்டு, அதனை சூட்கேஸில் வைத்து மின்சார ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் சென்று, தமிழ்நாடு எக்ஸ்பிரசில் போட்டுவிட்டு தப்பிச் சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

விசாரணை தீவிரம்
கைதான இருவரையும், கொலை நடந்த வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று எவ்வாறு கொ* நடந்தது? உடலை எந்த இடத்தில் வைத்து துண்டு துண்டாக வெட்டினர்? உடல் பாகங்களை எவ்வாறு சூட்கேஸில் அடைத்தனர்? பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட பொருட்கள் எங்கே உள்ளன? என்பது குறித்து கொலையாளிகளிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

Related Link
நகைகளுக்காக மூதாட்டி அடித்துக் கொ*? கம்பு காட்டில் ரண கொடூரமாக கிடந்த சடலம்

நகைகளுக்காக மூதாட்டி அடித்துக் கொ*? கம்பு காட்டில் ரண கொடூரமாக கிடந்த சடலம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved