news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் பக்கம் நிற்கிறாரா ராகுல் காந்தி? யார் அந்த உண்மையான காங்கிரஸ்?
tv

Also Watch

tv

Read this

விஜய் பக்கம் நிற்கிறாரா ராகுல் காந்தி? யார் அந்த உண்மையான காங்கிரஸ்?

நெல்லையில் திரியை கொளுத்திய விஜய்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நெல்லை மண்ணில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய், உண்மையான காங்கிரஸ் த.வெ.க., பக்கம் தான் நிற்கிறது என கொளுத்தி போட்டது, திமுக கூட்டணியில் மீண்டும் பூகம்பத்தை வெடிக்க செய்திருக்கிறது. புதுச்சேரி வரைக்கும் வருகை தந்தை ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் சென்றது சர்ச்சையை கிளப்பிய நிலையில், விஜய்யின் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன? விஜய்யால் திமுக கூட்டணியில் உருவான சலசலப்பு என்னென்ன?

நெல்லையில் விஜய்
சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார களம், நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. கடும் கட்டுப்பாடு காரணமாக தினமும் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றாலும், நெல்லை மண்ணில் வைத்து விஜய் பேசிய பேச்சு திமுக & கோ-வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை கே.டி.சி நகரில் பிரச்சாரம் செய்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்ளை அடித்த பணத்தை வைத்து கல்லாப் பெட்டி கூட்டணியை உருவாக்கி வைத்திருப்பதாக விமர்சித்தார். தற்போது திமுக கூட்டணியில் எல்லா PARTம் தனித்தனியாக இருப்பதாக கிண்டலடித்தார். சில, பல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரஸை தன் பைக்குள் போட்டுக் கொண்டார் மு.க.ஸ்டாலின் என்ற விஜய், உண்மையான காங்கிரஸ் த.வெ.க. பக்கம் தான் நிற்கிறது என குண்டை தூக்கி போட்டார்.

வந்தார், சென்றார், ராகுல்காந்தி
குறிப்பாக, தமிழக காங்கிரஸ் என அழுத்தமாக விஜய் அடிக் கோடிட்டு பேசியதின் பின்னணியில் உள் அர்த்தம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டின் போது பல பூகம்பம் வெடித்து சமீபத்தில் தான் ஓய்ந்தது. தமிழக வெற்றிக் கழகத்தை வைத்து திமுக கூட்டணியில் டிமாண்ட் ஏற்றிய காங்கிரஸ், கடந்த முறை பெற்றதை விட கூடுதலான தொகுதிகளை வாங்கியது. கனிமொழி டெல்லிக்கு சென்றது, ப.சிதம்பரம் அறிவாலயம் வந்தது என பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு முடிவானது. இருப்பினும் கூட ராகுல் காந்தி திமுக மீது பாராமுகம் தான் காட்டி வருகிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவான போது, ஒரு வாழ்த்து செய்தி கூட ராகுல் காந்தியிடம் இருந்து வரவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு நீலகிரிக்கு தனியார் பள்ளி நிகழ்ச்சிக்கு வந்த ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் டெல்லிக்கு திரும்பினார்.

காலையில், மாலையில்...
புதுச்சேரி தேர்தலுக்காக அண்மையில் வருகை தந்த ராகுல் காந்தி, அப்போதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. புதுச்சேரிக்கு வந்த ராகுல் காந்தியை, திமுக தரப்பு சந்திக்க விரும்பியும் கூட ராகுல் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காமல் போயிருக்கிறது.

புதுச்சேரியில் காலையில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய, மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இருப்பினும் கூட இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. கூட்டணி முடிவான போதே ராகுலும், ஸ்டாலினும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என யூகிக்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லாத சூழலே நிலவி வருகிறது.



விஜய் பேச்சு
புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மட்டும் மேடையேற்றி பிரச்சாரம் செய்தது, திமுகவுக்கு போட்டியாக களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை தனியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மாதிரியான ராகுல் காந்தியின் செயல்பாடுகள் திமுக மீது அதிருப்தியில் இருப்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவதே சந்தேகம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில் தான், உண்மையான காங்கிரஸ் தன் பக்கம் இருக்கிறது என ராகுல் காந்தியை மனதில் வைத்து தான் விஜய் பேசினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய்க்கு ராகுல் குரல்
ஏனென்றால், கரூர் விவகாரம் தொடங்கி ஜனநாயகன் படம் பிரச்சனை வரை விஜய்க்காக ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்கும் சூழலில், உண்மையான காங்கிரஸ் தன் பக்கம் இருப்பதாக விஜய் கூறியது திமுக முகாமில் புகைச்சலை கிளப்பியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய்யின் பேச்சை இன்னொரு விதத்திலும் அணுக வேண்டியுள்ளது. அதாவது, காங்கிரஸ், கூட்டணியில் இருப்பதால் தான் சிறுபான்மை சமூக வாக்குகள் திமுகவுக்கு விழுந்து வருகிறது. ஏனென்றால், பாஜகவை தேசிய அளவில் எதிர்க்கும் கட்சியாக காங்கிரஸ் இருப்பதால், இயல்பாகவே சிறுபான்மை சமூக மக்கள் காங்கிரஸுக்கு வாக்கு செலுத்துவார்கள்.

சிறுபான்மையினர் வாக்கு
குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் கிறிஸ்தவ சமூக மக்கள் கண்ணை மூடிக் கொண்டு காங்கிரஸுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள் என்ற நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமானால் திமுக பக்கம் இருக்கலாம். ஆனால், காங்கிரஸுக்கு ஓட்டுப் போடும் சிறுபான்மை சமூக மக்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டு பேசினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிறுபான்மை சமூக மத்தியில் விஜய்க்கு ஆதரவு இருக்கும் நிலையில், அதை மனதில் வைத்து தான் விஜய் பேசினாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

விஜய் மன்னிப்பு கோர வேண்டும்
இதனிடையே, விஜய்யின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி ரியாக்ட் செய்திருக்கிறது. விஜய் பேசியது முற்றிலும் ஆதாரமற்ற, தவறான, உள்நோக்கத்துடன் விஷமத்தனமாக கூறப்பட்ட கருத்து எனக் கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, தங்களுடன் கூட்டணி வைக்க த.வெ.க. தான் திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது எனவும், அந்த முயற்சிகள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. காங்கிரஸை சீண்டி பார்க்கும் வேலையை விஜய் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அரசியல் நாகரீகத்திற்கு எதிராக பேசிய விஜய் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Related Link
மிஸ் ஆன ஒரு தொகுதியால் அப்செட்டில் தவெக விஜய்

மிஸ் ஆன ஒரு தொகுதியால் அப்செட்டில் தவெக விஜய்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய்யை பார்க்க 500 பேர் வருவார்கள்

8
26 mins agoshare
காரைக்குடி வருகிறார் விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved