கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மவுனம் கலைத்தார் விஜய். 41 பேர் உயிரிழந்த சம்பவம் தற்போது வரை தன்னை துரத்தி கொண்டிருப்பதாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அரசியலுக்கு வர வேண்டும் என்ற முடிவு, நீண்டகாலம் யோசித்து எடுத்த முடிவு என விஜய் விளக்கம் கூறியுள்ளார். தனது பாதை நீண்ட கால பயணத்திற்கான திட்டம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தன்னுடைய வழிகாட்டிகள் பட்டியலில் கலைஞர் பெயரையும் குறிப்பிட்ட தவெக தலைவர் விஜய், எம்ஜிஆர், ஜெயலலிதா பெயருடன் கலைஞர் கருணாநிதி எனக் குறிப்பிட்டுள்ளார். விஜய் அளித்த முதல் பேட்டிஅரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் விஜய் பேட்டியளித்துள்ளார். சென்னையில், அவரைச் சந்தித்த அந்த ஊடகக் குழுவினரிடம் விஜய் கூறியதாவது: கரூர் சம்பவம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. இன்றளவும் என்னை அந்த நிகழ்வு பாதிக்கிறது, இப்படியொரு நிகழ்வு நடக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ, அதில் நான் உறுதியாக இருப்பேன். எனது இலக்கு பற்றி அறியாமல் நான் எதையும் செய்வதில்லை. அந்த வகையில், அரசியல் தான் எனது எதிர்காலம் என்று நான் முடிவு செய்துவிட்டேன்.ஜனநாயகன் - விஜய் கணிப்பு‘ஜனநாயகன்’ திரைப் படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் வரும் என்று நான் முன்கூட்டியே கணித்திருந்தேன். எனது படம் அரசியல் காரணங்களுக்காக, நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு நான் மனதளவில் தயாராகி இருந்தேன். ஆனால், திரைப்படம் தள்ளிப்போவதால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக நான் வருந்துகிறேன்.நான் கிங் மேக்கர் அல்ல...அரசியலில் நான் கிங்மேக்கராக முத்திரை குத்தப்பட விரும்பவில்லை. நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற சூழல் இருக்கும்போது நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன். எனக்குச் சேரும் கூட்டத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள் தானே. பல ஆண்டுகளாக, திரைப்படங்களில் நான் நடித்துள்ளேன். இனி, அரசியல் செய்வது என்று தீர்மானித்து தான் வந்துள்ளேன். இந்த மாற்றம் அத்தனை எளிதாக நடந்து விடவில்லை. அரசியலில் எனது ரோல் மாடல் எம்ஜிஆர், ஜெயலலிதா தான். இவ்வாறு விஜய் கூறியுள்ளார். Related Link ராகுலை கனிமொழி சந்தித்தது ஏன்?