news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மதுபான கடைகள் தனியார் மயம்? அமைச்சர் பதில்
tv

Also Watch

மதுபான கடைகள் தனியார் மயம்? அமைச்சர் பதில்

ஜனநாயகன் பார்க்க லீவு?

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் தனியார் மயமாக்கும் திட்டமும் விவாதத்தில் உள்ளது என்று அமைச்சர் விக்னேஷ் கூறி உள்ளார்.

கல்குவாரி விவகாரம், ஆய்வு
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்திருந்த மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தீர்வு காணும் வகையில் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது;

கிணத்துக்கடவு பகுதியில் அதிக அளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் முறைகேடாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் கனிமவளத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா வாயிலாக முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். முறைகேடாக செயல்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்து பிரச்சினைகள் சரி செய்யப்படும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

டாஸ்மாக் கடைகள் தனியார் மயமா?
பல மதுபான கடைகளில், கூட்ட நெரிசல் காரணமாக மது வழங்கும் கவுன்டர்களில் விற்பனையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மதுக் கூடங்களில் ஆங்காங்கே பாட்டில்கள்  குப்பைகளாக சிதறி கிடக்கிறது, சிலர் மது போதையில் படுத்து கிடக்கின்றனர். இந்த நிலை தொடர கூடாது, சீரமைக்க வேண்டும் என தான், தவெக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடத்தப்பட்ட விவாதத்தில் உணவகத்துடன் கூடிய மதுபான கடைகள் செயல்படுத்தலாமா? தனியார் மயமாக்கலாமா? அரசு மதுபான கடைகளில் கட்டமைப்புகளை மாற்றி அமைக்கலாமா? டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூடி விடலாமா? என விவாதிக்கப்பட்டது. அதில் உணவகத்துடன் கூடிய மதுபான கடை என்றதை மட்டும் பெரிது படுத்தி விட்டார்கள். தனியார் மயமாக்கப்படும் என்ற திட்டமும் கலந்துரையாடலில் உள்ளது.

ஜனநாயகன் படம் பார்க்க லீவு?
’ஜனநாயகன்’ திரைப்படம் பார்ப்பதற்காக லீவு கேட்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் MLAக்கள் எல்லாம் சட்டசபையில், எம்ஜிஆர் பாடல்களை பாடியுள்ளனர். அவர்கள் பாடினால் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் எங்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? எங்களுக்குள்ளும் ஒரு உணர்வு இருக்கும், என்றும் எங்கள் தளபதி தான்.
இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்

Related Link
அனைத்து சான்றிதழ்களும் டிஜிட்டல் மயம் என ராஜ்மோகன் தகவல்

அனைத்து சான்றிதழ்களும் டிஜிட்டல் மயம் என ராஜ்மோகன் தகவல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved