Also Watch
Read this
தமிழக சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பன்னீர்செல்வம் - திமுக எம்எல்ஏ
இந்தப் பேரவையில் செய்யாமல் விட்டதை, நான் சுட்டிக் காட்டி உள்ளேன். நல்லதும் மாற்றம் தான், கேட்டதும் மாற்றம் தான். எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்குப் பெருத்த ஏமாற்றம் தான்.
செங்கோட்டையன் - அமைச்சர்
ஓ. பன்னீர்செல்வம், ஏற்கெனவே நிதி அமைச்சராக இருந்து பணியாற்றியவர். ஒரு அரசு தேர்தல் நேரத்தில் அறிவிக்கின்ற திட்டங்களை ஐந்து ஆண்டு இறுதி வரையிலும் நிறைவேற்றும். நீங்கள் சொல்வதைப் போல மூன்றே மாத காலத்தில் ஒரு சரித்திரம் படைக்க இயலாது. நீங்கள் அப்படி சரித்திரம் படைத்தால் சொல்லுங்கள்.

பன்னீர்செல்வம் - திமுக எம்எல்ஏ
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை, இந்த புதிய அரசு தேர்தல் வாக்குறுதிகளின் முன்னோட்டங்களாக இந்த சட்டமன்றத்தில் கூட அறிவித்திருக்கலாம். அதைக்கூட அறிவிக்கவில்லை என்பதுதான் எங்களின் வாதம். தமிழக மக்கள் இன்று ஏமாந்து நிற்கிறார்களே, இது அவர்களின் எண்ணமாக இருக்கிறது.
செங்கோட்டையன் - அமைச்சர்
தமிழகமே பாராட்டிக் கொண்டிருக்கிற ஒரு தூய ஆட்சியைப் பற்றி ஏமாற்றத்தை உருவாக்கும் ஆட்சி என்று நீங்கள் சொல்லும்போது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் இடம் மாறியிருக்கிறீர்கள், பரவாயில்லை. அதற்காக இப்படி துதிபாட வேண்டிய அவசியம் இல்லை.

பன்னீர்செல்வம் - திமுக எம்எல்ஏ
அந்த இடத்தை அவர்தான் முதலில் மாறியவர் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved