Also Watch
Read this
மருத்துவ படிப்புகளுக்கான மறு தேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல்
இதுதொடர்பாக, தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது;
மத்திய அரசின் ஒப்புதலோடு ஜூன் 21ஆம் தேதி நீட் மறு தேர்வு நடத்தும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வர்களும், பெற்றோரும் எந்தவிதமான தகவலுக்கும், அதிகாரப்பூர்வமாக தகவல் பகிரும் ஆதாரங்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாணவர்கள் கவனத்திற்கு...
மாணவர்கள் மேலதிக விவரங்களுக்கு email at neet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், 011-40759000, 011-69227700 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தேசிய தேர்வு முகமை பதிவிட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு
2026-27ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80%க்கும் மேற்பட்ட வினாக்கள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. மருத்துவம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயத்தில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதாக, அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

நீட் தேர்வு ரத்து
வினாத்தாள் கசிந்ததால், கடந்த 3ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதன்படி, மறு தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved