Also Watch
Read this
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 79 காசுகள் அதிகரித்து, 104 ரூபாய் 46 காசுகளுக்கு விற்பனை ஆனது.
தலைநகர் சென்னையில்...
சென்னையில், பெட்ரோல் விலை 82 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.104.46 என விற்பனை ஆனது. டீசல் விலை 86 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.96.11 என விற்பனை ஆனது.

தலைநகர் டெல்லியில்...
தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.77ல் இருந்து ரூ.98.64க்கு உயர்ந்தது. டீசல் விலை ரூ.90.67ல் இருந்து ரூ.91.58 ஆக விலை அதிகரித்து உள்ளது.

விலைவாசி மேலும் உயரும் என அச்சம்
நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து உள்ளது. தொடர் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

மே 15ஆம் தேதி
கடந்த 2022, ஏப்ரல் மாதத்தில் இருந்து 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி விற்பனை ஆனது. இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 3 ரூபாய் அதிகரித்து உள்ளது.

மோதலுக்கு முன்னதாக...
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதலுக்கு முன்னதாக ஒரு பேரல் 70 - 72 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, பதற்றத்தின் உச்ச கட்டத்தில் 120 டாலரை கடந்தது. தற்போது 104 - 110 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆனது. இதனால் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் அதிகரித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, இறக்குமதி செலவை அதிகரிக்க வைத்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved