news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பின்னணிப்பாடகி ஆஷா போஸ்லே மறைவு
tv

Also Watch

tv

Read this

பின்னணிப்பாடகி ஆஷா போஸ்லே மறைவு

கொஞ்சும் தமிழில் பாடியவருக்கு இசையஞ்சலி

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 92 வயதில் மறைந்தார். தமிழில் மறக்க இயலாத பாடல்களை பாடிய ஆஷா போஸ்லே, கொஞ்சும் குரலில் தமிழ் பாடி எண்ணற்ற இதயங்களை கவர்ந்தவருக்கு இசை ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில்...
மும்பையில் உள்ள கேண்டி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஏப்ரல் 12ஆம் தேதி, அவர் காலமானார். உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர பாடகி
கடந்த 1933ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில் உள்ள சங்க்லியில் அவர் பிறந்தார். சிறு வயதிலேயே தனது இசைப்பயணத்தை தொடங்கினார். பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதில் இசையின் பல்வேறு பயணங்களும் உண்டு. 1950களில் தேசம் பரவலாக அறியப்பட்ட நட்சத்திர பாடகியாக உயர்ந்தார்.

தமிழில் பாடி அசத்தல்
தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ஆகியோரது இசையில் ஆஷா போஸ்லே பாடல்களைப் பாடியுள்ளார்.

செண்பகமே செண்பகமே... எங்க ஊரு பாட்டுக்காரன்
செப்டம்பர் மாதம்... அலைபாயுதே

ஓ பட்டர்பிளை... மீரா
நீ பார்த்த பார்வை... ஹே ராம்
உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.

விருதுகளை வென்றவர்
இசையில் இவரது பங்களிப்பை போற்றும் வகையில் தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம விபூஷண் விருது ஆகியவை வழங்கப்பட்டன. இவரது மறைவை அடுத்து திரை உலகினர், இசைத் துறையினர், பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Link
ஜனநாயகன் ரிலீஸ்? என்ன நடந்தது? யார் அந்த கருப்பு ஆடு?

ஜனநாயகன் ரிலீஸ்? என்ன நடந்தது? யார் அந்த கருப்பு ஆடு?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் Mass Speech, அதிரும் குமரி

25
17 mins agoshare
விஜய் புதிய வாக்குறுதிகள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved