Also Watch
Read this
By: Admin News Tamil

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில சீனாவுக்கு போயிருக்காரு பிரதமர் மோடி...
அறிவிச்ச கையோடு அமலுக்கும் வந்திருச்சு, அமெரிக்கா விதிச்ச ஐம்பது சதவீத வரி. ரஷ்யா கிட்ட இருந்து கச்சா எண்ணெய வாங்குறதால வரி விதிப்புன்னு அமெரிக்கா அறிவிச்சிருச்சு.
இதனால, இந்தியாவுல, கடும் பொருளாதார நெருக்கடி, பல சவால்களை சந்திக்க வேண்டிய சூழல்.
இந்த நிலையில தான், சீனாவுக்கு கிளம்பி போயிருக்காரு பிரதமர் மோடி. ஜப்பான், சீனாவுல பல்வேறு நிகழ்ச்சிகள்ல பங்கேற்க போறாரு.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கடந்த 19ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து, பிரதமர சந்திச்சாரு. ஆகஸ்ட் 31ஆம் தேதி, சீனாவுல தொடங்குற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுல கலந்துக்க வாங்கன்னு கூப்பிட்டாரு...
கல்வான் பள்ளத்தாக்குல தாக்குதல் நடந்த நிலையில, சுமார் 7 ஆண்டுக்கு பிறகு சீனா போறாரு பிரதமர் மோடிங்கிறது முக்கியமில்ல. அமெரிக்கா 50 சதவீத வரி விதிச்சிருக்குற நேரத்துல, பிரதமர் போறாருங்கிறது தான் பேசுபொருளாயிருக்கு.
இந்த நிலைமையில, இந்தியாவுக்கான ஏற்றுமதி தடைய சீனா முழுமையா நீக்கியிருக்கு. உரங்கள், அரிய வகை தனிமங்களை இந்தியாவுக்கு தாராளமா வழங்க சீனா முன்வந்திருக்கு. சுரங்கம் தோண்டுற இயந்திரங்களை வழங்கவும், நதி நீர் தகவல்கள தரவும் ஒப்புக் கொண்டிருக்கு.
இந்தியா, சீனா இடையே தரை வழி போக்குவரத்தும் தொடங்கியிருக்கு... இதனால, இந்தியாவோட வேளாண்மை, ஆட்டோமொபைல் துறை வளரப்போகுது...
அடுத்து இந்திய, சீன பிரதமருங்க சந்திக்க போறாங்க...
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏகப்பட்ட தகராறு இருக்கு தான். ஆனா, இந்த சூழல்ல சிறப்பான சந்திப்பு நடக்கப்போகுது...
இதுக்கு காரணம், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடுங்கிற SCO தான். அதாவது, Shanghai Cooperation Organisation...

வரி தொடர்பான விஷயத்தில அமெரிக்காவ எதிர்கொள்ள சரியான கூட்டணி வேணும்... அதனால தான் சீனாவுக்கு போறாரு பிரதமர் மோடி...
ஆகஸ்ட் 31ஆம் தேதியில இருந்து, செப்டம்பர் 1ம் தேதி வரை சீனாவோட தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடக்குது. இதுல, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் கலந்துக்கிறாங்க. அடுத்த பத்தாண்டுகளுக்கான வளர்ச்சிப் பயணத்தை இந்த மாநாடு தயாரிக்க போகுது...
முக்கியமா, பாதுகாப்பு அச்சுறுத்தல சமாளிக்கிற வகையில, தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கடந்த 24 ஆண்டுகளா பிரம்மாண்டமா வளர்ந்திருக்கு...
எல்லைப் பாதுகாப்பு பிரச்சனைகள கையாள, கடந்த 1996ஆம் வருஷம், சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் நாடுங்க கை கோர்த்தாங்க... 2001ஆம் வருஷத்துல உஸ்பெகிஸ்தானும் ஆறாவதா வந்து சேர்ந்தாங்க.
அதுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளும் உறுப்பினரானாங்க.
இப்ப 10 உறுப்பு நாடுகளும், இரண்டு பார்வையாளர் நாடு, 14 பேச்சுவார்த்தை நாடுன்னு வளர்ந்திருக்கு இந்த அமைப்பு.
பொதுவான வளர்ச்சி, அர்ப்பணிப்பு, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனைன்னு திட்டமிட்டு செயல்படுறாங்க.
இந்த அமைப்பு தொடங்கி, 20 வருஷத்துல, இதன் உறுப்பு நாடுகளின் மொத்த வர்த்தக மதிப்பு கிட்டத்தட்ட 100 மடங்கு கூடிருக்கு. இது அசுர வளர்ச்சின்னு சொல்றாங்க...

மேற்கத்திய நாடுகளோட ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், ஆசிய நாடுகளின் வளர்ச்சியை ஒருங்கிணைக்கவும் இந்த அமைப்பு முக்கியமா செயல்படுது. அதனால இந்தியாவும் கை கோர்த்திருக்கு.
முக்கியமா, அமெரிக்காவோட ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், சொந்த வர்த்தக உறவுகளை வளர்க்கவும், இந்தியா திட்டமிடுது. வளர்ச்சி தாங்க நமக்கு முக்கியம். பெரியண்ணன் மனப்பான்மையில ஆடு-புலி ஆட்டத்த காண்பிச்சாலும், அசர மாட்டோம்ன்னு இந்தியா களமிறங்கியிருக்கு.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுல தரமான சம்பவத்த பார்க்கலாம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்துல உண்டுங்கண்ணா...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved