news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ராகுல் யாத்திரையில் இணைந்தார் பிரியங்கா
tv

Also Watch

tv

Read this

ராகுல் யாத்திரையில் இணைந்தார் பிரியங்கா

பீகார்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
priyanga

பீகார் மாநிலத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்தார்.

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆயிரத்து 300 கிலோ மீட்டர் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யை ராகுல் காந்தி, பீகாரில் மேற்கொண்டு வருகிறார்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1ஆம் தேதி பாட்னாவில் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், சுபால் பகுதியில் இன்று நடைபெறும் யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்தார்.

ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் இந்தியா கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் பிரியங்கா காந்தி, காரின் மேல் அமர்ந்தபடி மக்களை சந்தித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
1 min agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved