முத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ராமம் ராகவம் திரைப்படம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.