ரவி மோகன் நடிக்கும் 34 ஆவது திரைப்படத்தின் பெயர் டீசருடன் வெளியிடப்பட்டுள்ளது. பிரதர், காதலிக்க நேரமில்லை படங்களைத் தொடர்ந்து ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தை DADA படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்நிலையில், புதிய படத்துக்கு கராத்தே பாபு என தலைப்பிடப்பட்டு டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சட்டமன்றத்துக்குள் எதிர்கட்சியும், முதல்வரும் பேசும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக ரவி மோகன் நடித்துள்ளார்.