news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வாக்காளர்களுக்கு சாபமிட்ட ஆர்.எஸ்.பாரதி
tv

Also Watch

வாக்காளர்களுக்கு சாபமிட்ட ஆர்.எஸ்.பாரதி

"திமுகவிற்கு கூட்டணி கட்சிகள் திரும்பும்"

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் வாக்காளர்களை அவமதிக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு, பேசு பொருளாகி உள்ளது. மா.சுப்பிரமணியனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என சாபமிட்டவர், குத்தகை காலம் முடிந்த பின்பு கூட்டணி கட்சிகள் திமுகவிற்கு திரும்பும் என ஆர்.எஸ்.பாரதி நம்பிக்கை தெரிவித்தார். 6 மாதமோ, 11 மாதமோ லீசுக்கு சென்றுள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.

திமுக பொதுக்கூட்டம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை போரூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது;
திமுகவில் இருந்து சென்ற கூட்டணி கட்சிகள் எல்லாம் லீசுக்கு சென்றுள்ளது. ஆறு மாதமோ, 11 மாதமோ லீஸ் முடிந்த பிறகு ஓனரிடமே வந்துவிடும். ஏனென்றால், கூட்டணி கட்சிகளுக்கு ஓனர் திமுக தான். விலைவாசி, மின் கட்டணம், வரி உயர்வு எல்லாம் பேச வேண்டாம். திமுக கொள்கையை மட்டும் பேசுங்கள்.

மா.சு. தோல்வி...
மா.சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்ட நோயாளிகளின் உறவினர்கள், அவருக்கு வாக்களிக்காமல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து அவரைத் தோற்கடித்துள்ளனர். சைதாப்பேட்டை வாக்காளர்கள், 'கஞ்சா அடித்துவிட்டு' தவெக-வின் விசில் சின்னத்திற்கு வாக்களித்து விட்டார்கள். மக்கள் தங்கள் தலையிலேயே மண் அள்ளிப் போட்டுக் கொண்டார்கள். நல்ல சாவே வராது.

வெற்றி பெறுவோம்
எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது, 1986ல் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது போல் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும்

இனிமேல், பொதுமக்களுக்காக எந்த நன்மையும் செய்ய வேண்டாம். நம் கட்சிக்காரர்களுக்கு மட்டும் செய்யுங்கள். 5 ஆண்டுகள் நாம் ஓய்வெடுப்போம்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

Related Link
'கேலி' பண்றீங்களா? என மரிய வில்சன் ஆவேசம்

'கேலி' பண்றீங்களா? என மரிய வில்சன் ஆவேசம்

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved